மக்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனைகள் குறித்து விவாதம்! கனேடிய பிரதமரின் பதிவு
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிலி நாட்டின் ஜனாதிபதியை சந்தித்தது குறித்து பதிவிட்டுள்ளார்.
சிலி ஜனாதிபதியுடன் சந்திப்பு
தாய்லாந்து சென்ற கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், ஜூலியா ஆண்டர்சனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் பெண்கள் மற்றும் அவர்களின் பன்முகத்தன்மையிலும், முழு ஆரோக்கியத்திற்கான உரிமையை உணரக்கூடிய ஒரு உலகத்தை உருவாக்குவது பற்றி விவாதித்தேன் என குறிப்பிட்டார்.
When I arrived in Thailand today, I had the chance to speak with Julia Anderson from @CanWaCH. With global cutbacks to women’s health, we discussed building a world where women and girls, in all their diversity, can realize their right to full health. pic.twitter.com/0Tv1KRfTDq
— Justin Trudeau (@JustinTrudeau) November 17, 2022
அதன் பின்னர், சிலி நாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக்கை சந்தித்த ட்ரூடோ, அவருடன் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,
'எங்கள் இரு நாடுகளிலும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனைகளில் நாங்கள் சிலியுடன் இணைந்து செயல்படுகிறோம். எனது நண்பர் கேப்ரியல் போரிக் உடனான எனது சமீபத்திய உரையாடலில் வர்த்தகம் மற்றும் நமது பொருளாதாரங்களை வளர்ப்பதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், உக்ரைனுடன் நிற்பதற்கும் நாங்கள் ஒன்றாக செய்துகொண்டிருக்கும் பணியை நாங்கள் உள்ளடக்கியுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
We’re working together with Chile on the big issues that people in both our countries are facing. In my latest conversation with my friend @GabrielBoric, we covered the work we’re doing together to grow trade and our economies, protect the environment, and stand with Ukraine. pic.twitter.com/9YoJAQFTg3
— Justin Trudeau (@JustinTrudeau) November 17, 2022
இருநாட்டு ஒப்பந்தம்
முன்னதாக, முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு பிரகடனத்தில், இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
மேலும், கனேடிய வர்த்தக அமைச்சர் மேரி எங் மற்றும் சிலி வெளியுறவு அமைச்சர் அன்டோனியா உர்ரெஜோலா நோகுவேரா ஆகியோரும் குறித்த பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.