மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கனேடிய மக்கள்.. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எடுத்த நடவடிக்கை
கனடாவில் வீடுகளை சூறையாடிய புயலால் தடைபட்ட மின்சாரம்
அட்லாண்டிக் கனடா மற்றும் கிழக்கு கியூபெக் பகுதிகளில் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவ விரைந்த குழுக்கள்
கனடாவில் புயல் பாதிப்பால் மின்சாரம் தடைப்பட்டதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை எடுத்துள்ளார்.
கனடாவின் கிழக்கு பகுதியை பியோனா என்ற பயங்கர புயல் தாக்கியதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
மேலும் இந்த புயல் பாதிப்பால் பல வீடுகளில் மின்சாரம் துண்டானது. இந்த நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மின்சார தேவைக்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.
Many people across Atlantic Canada and Eastern Quebec are without power, and these @HydroOttawa crews are heading out East to help them. To all of the crews who are doing this work, to all of the first responders, and to everyone who has stepped up: Thank you. Please stay safe. pic.twitter.com/v0Q1OCQEYM
— Justin Trudeau (@JustinTrudeau) September 26, 2022
அவர் வெளியிட்ட பதிவில், 'அட்லாண்டிக் கனடா மற்றும் கிழக்கு கியூபெக் முழுவதும் பல மக்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர். இந்த HydroOttawa குழுக்கள் அவர்களுக்கு உதவ கிழக்கு நோக்கி செல்கின்றன.
இந்தப் பணியைச் செய்யும் அனைத்துக் குழுவினருக்கும், முதலில் பதிலளித்த அனைவருக்கும், முடுக்கிவிட்ட அனைவருக்கும் நன்றி. தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்' என பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதவியில் குழுவினருடன் அவர் உரையாடும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
Ingrid Bulmer/Reuters
REUTERS/Ted Pritchard