அந்த செய்திகள் நெஞ்சை பதற வைக்கின்றன: ஜஸ்டின் ட்ரூடோ வேதனை
இத்தாலியில் இருந்து வரும் செய்திகளும், படங்களும் தன் நெஞ்சை பதற வைப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேதனை தெரிவித்துள்ளார்.
13 பேர் பலி
இத்தாலி நாட்டின் வடக்கு எமிலியா-ரோமக்னா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 13 உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் கனமழை வெள்ளத்தினால் 23 ஆறுகள் கரைபுரண்டு ஓடியதில் 41 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
280 நிலச்சரிவுகள் ஏற்பட்ட நிலையில் சுமார் 20,000 பேர் வீடுகளை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. பிராந்தியம் முழுவதும் 2000 மீட்பு நடவடிக்கைகளை தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
100 ஆண்டுகளில் இத்தாலியை பாதித்த மிகக் கடுமையான வெள்ளம் இது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளத்தினால் இத்தாலி பாதிக்கப்பட்டிருப்பதற்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேதனை தெரிவித்துள்ளார்.
ட்ரூடோ வேதனை
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'வடக்கு இத்தாலியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள செய்திகளும், படங்களும் நெஞ்சை பதற வைக்கின்றன. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு கனேடியர்கள் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவரையும் எங்கள் எண்ணங்களில் வைத்திருக்கிறோம். தேவைப்பட்டால் ஆதரவை வழங்க நாங்கள் உடன் நிற்போம்' என தெரிவித்துள்ளார்.
Jasper Juinen/Bloomberg File PhotoThe reports and images of severe flooding in Northern Italy are heartbreaking. On behalf of Canadians, I’m sending my deepest condolences to those who have lost loved ones. We’re keeping everyone affected in our thoughts, and we’re standing by to provide support if needed.
— Justin Trudeau (@JustinTrudeau) May 20, 2023