நமது ஜனநாயகத்தை பாதுகாப்பது இப்போது முக்கியமான வேலை! மேக்ரானை சந்தித்த பிரதமர் ட்ரூடோ
ஜி7 மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடனான சந்திப்பு குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.
தலைவர்கள்
இத்தாலியில் ஜி7 மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சந்தித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து கனடா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் கூட்டணி குறித்து ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.
கனடா பெருமைகொள்கிறது
அவரது பதிவில், ''கனடாவும், பிரான்ஸும் இப்போது அட்லாண்டிக் கடல் கடந்த பாதுகாப்பை வலுப்படுத்துவது, தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவது, நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என மிக முக்கியமான வேலைகளில் கூட்டாளிகளாக உள்ளன. இப்போது இதுதான் முக்கியமான வேலை. இந்த வாரம் ஜி7 மாநாட்டில் இமானுவல் மேக்ரானுடன் நான் விவாதிக்க நிறைய இருந்தது'' என தெரிவித்துள்ளார்.
Canada and France are partners in so much important work right now, from strengthening transatlantic defence, to fighting misinformation, to protecting our democracies — so @EmmanuelMacron and I had a lot to discuss at the @G7 this week. pic.twitter.com/lpsXg42n8J
— Justin Trudeau (@JustinTrudeau) June 14, 2024
மேலும் அவரது மற்றொரு பதிவில், 'ஜனநாயகம் கொண்ட ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கான நட்பு நாடுகளான நமது ஜி7 உடன் இணைந்து நிற்பதில் கனடா பெருமைகொள்கிறது. அடுத்த ஆண்டு ஆல்பர்ட்டாவின் Kananaskisயில், அவர்களை நமது வீட்டில் மாநாடு நடத்துவதில் பெருமிதம் கொள்வோம்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |