மகாராணியுடனான உரையாடல்களை தவறவிடுவேன்! கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேதனை
நம் அனைவருக்கும் வசதியையும், வலிமையையும் கொண்டு ராணி எலிசபெத் வந்தார் - ஜஸ்டின் ட்ரூடோ
Rideau Hall-யில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்ட ஜஸ்டின் ட்ரூடோ
பிரித்தானிய மகாராணியின் மறைவு குறித்த இரங்கல் புத்தகத்தில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கையெழுத்திட்டார்.
பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்தியது உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனேடியர்களுக்கான ராணியின் சேவை கனடாவின் வரலாற்றில் எப்போதும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ராணி எலிசபெத்தின் மறைவு கனேடியர்களுக்கு வரவிருக்கும் நாட்கள் ஒரு துக்க காலமாக இருக்கும் என குறிப்பிட்டார்.
PC: WPA POOL/GETTY IMAGES
இந்த நிலையில் Rideau Hall-யில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்ட ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட பதிவில், 'மகாராணி இரண்டாம் எலிசபெத் உடனான உரையாடல்களை நான் தவற விடுவேன். அவர் சிந்தனையுடனும், ஆர்வத்துடனும், உதவிகரமாகவும், வேடிக்கையாகவும் இருந்தார். மேலும் அவர் நம் அனைவருக்கும் வசதியையும், வலிமையையும் கொண்டு வந்தார். அவரது வாழ்நாள் சேவையின் நினைவாக இன்று மாலை Rideau Hall-யில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டேன்' என தெரிவித்துள்ளார்.
I will so miss the chats I had with Her Majesty Queen Elizabeth II. She was thoughtful, curious, helpful, and funny – and she brought comfort and strength to us all. In memory of her lifetime of service, I signed the book of condolences at Rideau Hall this evening. pic.twitter.com/yDZNKSQK53
— Justin Trudeau (@JustinTrudeau) September 10, 2022