இருநாட்டு தலைவர்களை சந்தித்த ட்ரூடோ! கூறிய முக்கிய விடயம்
அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளுடனான பொருளாதார ஒத்துழைப்பு நம்ப முடியாத அளவிற்கு முக்கியமானது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அமிகோஸ் உச்சி மாநாடு
மெக்சிகோவில் நடைபெறும் மூன்று நாடுகளின் அமிகோஸ் உச்சி மாநாட்டில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றுள்ளார்.
ட்ரூடோ, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் மெக்ஸிகோ ஜனாதிபதி ஆண்ட்ரீஸ் மானுவல் லோபெஸ் ஓப்ராடோர் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் பல முக்கிய விடயங்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் உறுப்பினராக சேர, கோஸ்டாரிகாவிடம் இருந்து கடந்த மாதம் கோரிக்கை வந்ததை கனடா மற்றும் மெக்ஸிகோ ஆர்வம் காட்டவில்லை.
@Adrian Wyld/The Canadian Press
ட்ரூடோவின் பதிவு
இந்த நிலையில் உச்சி மாநாடு குறித்து ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், 'கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ இடையே பொருளாதார ஒத்துழைப்பு நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது.
இன்று நாம் நேரத்தை செலவழித்த வணிகத் தலைவர்களுக்கு இது பெரும்பாலானவற்றை விட நன்றாக தெரியும். மேலும், வட அமெரிக்கா முழுவதும் நல்ல வேலைகளையும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்க அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் ' என கூறியுள்ளார்.
@AP Photo/Fernando Llano