பதவி விலகுவதாக அறிவித்த நியூசிலாந்து பிரதமர்.. ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமான பதிவு
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், கனேடிய பிரதமர் ட்ரூடோ அவருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
ஜெசிந்த ஆர்டெர்ன் பதவி விலகல்
பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் பதவி விலக திட்டமிட்டுள்ளதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார்.
உலகின் இளம் பெண் தலைவராக தெரிவான ஜெசிந்தாவின் இந்த திடீர் முடிவு சர்வதேச அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. கோவிட் 19 உட்பட பல்வேறு பிரச்சனைகளை நியூசிலாந்து எதிர்கொண்டபோது ஜெசிந்தா அதனை சிறப்பாக கையாண்டார்.
The Canadian Press
ட்ரூடோவின் பதிவு
இந்த நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நன்றி கூறி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,
'உங்கள் கூட்டாண்மை மற்றும் உங்கள் நட்பு, அனுதாபம், இரக்க குணம், வலுவான மற்றும் நிலையான தலைமைக்கு நன்றி ஜெசிந்தா ஆர்டெர்ன். நீங்கள் செய்த வித்தியாசம் அளவிட முடியாதது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் சிறந்ததைத் தவிர நான் வேறு எதை தர முடியும் என் நண்பரே' என பதிவிட்டுள்ளார்.
Thank you, @JacindaArdern, for your partnership and your friendship – and for your empathic, compassionate, strong, and steady leadership over these past several years. The difference you have made is immeasurable. I’m wishing you and your family nothing but the best, my friend. pic.twitter.com/72Q5p9GZzg
— Justin Trudeau (@JustinTrudeau) January 19, 2023
@AP