பிரித்தானிய ராணியின் இறுதிச்சடங்கு.. கனேடிய பிரதமரின் உருக்கமான பதிவு
பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கு குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்வீட் செய்துள்ளார்
கனேடிய வரலாற்றின் பாதியை ஆட்சி செய்தவர் என மகாராணியை குறிப்பிட்ட ஜஸ்டின் ட்ரூடோ
மகாராணியாரின் இறுதி சடங்கு குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் இன்று நடைபெற உள்ள நிலையில், இந்த இறுதிச் சடங்கு விழாவிற்கு 100க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிரித்தானியாவின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவரும், கனடாவின் மிக நீண்ட கால ஆட்சி செய்தவருமான மகாராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக அரச தலைவருக்கும், பிரமுகர்களும் லண்டனில் குவிந்துள்ளனர்.
(Jacob King/Pool via AP, File)
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவரது மனைவி கிரெகோயருடன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு வந்திருந்தார். அவர்கள் இருவரும் கனேடிய தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினர். இந்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், 'இன்று நமது நாட்டின் வரலாற்றில் ஏறக்குறைய பாதியை ஆண்ட, மாட்சிமை மிக்க ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நடக்கிறது. கனடாவின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இறையாண்மை, அவரது இறுதிச்சடங்கு நிகழ்வு லண்டனில் நடைபெறுகிறது. அவரது மாட்சிமையின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு, அவரது நினைவைப் போற்றுவதில் எங்களுடன் சேருங்கள்' என தெரிவித்துள்ளார். அத்துடன் நிகழ்வின் நேரலை Link -ஐ குறிப்பிட்டுள்ளார்.
Today, the funeral for Her Majesty Queen Elizabeth II – Canada’s longest-reigning sovereign, whose reign spans nearly half of our country’s history – is taking place in London. Tune in to Her Majesty’s funeral and join us in honouring her memory here: https://t.co/vYgYJqQdbn
— Justin Trudeau (@JustinTrudeau) September 19, 2022