23,500 ஆப்கான் புலம்பெயர்ந்தோரை வரவேற்ற கனடா! எங்கள் வீட்டிற்கு வாருங்கள் எனக் கூறிய ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் 23,500 ஆப்கானைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்
புதிதாக மீள்குடியேற்றப்பட்டுள்ளவர்களை கனேடிய பிரதமர் மற்றும் குடிவரவு அமைச்சர் ஆகியோர் வரவேற்றுள்ளனர்
கனடாவில் புதிதாக புலம்பெயர்ந்த ஆப்கானிஸ்தானை மக்களை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மக்கள் பட்டய விமானங்கள் மூலம் டொரோண்டோ மற்றும் எட்மன்டன் நகரங்களுக்கு வந்தடைந்தனர்.
அவர்களை பாதுகாப்பாக குடியமர்த்த கடுமையாக உழைப்போம் என குடிவரவு அமைச்சர் சீன் ஃபிரேசர் தெரிவித்துள்ளார். மேலும், கனடா 23,500 ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோரை வரவேற்பதாகவும், குறைந்தபட்சம் 40 ஆயிரம் புலம்பெயர்ந்தோரை 2023ஆம் ஆண்டு முடிவதற்குள் மீள்குடியேற்ற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
More than 23,500 Afghan refugees have resettled in Canada. That’s more than 23,500 new neighbours. New friends. New community leaders. To them, we say welcome home. ?? https://t.co/h49apD0tsY
— Justin Trudeau (@JustinTrudeau) October 27, 2022
இதுதொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட பதிவில், 'மேலும் 23,500 ஆப்கானைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் கனடாவில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 23,500க்கும் அதிகமான புதிய அண்டை நாட்டவர்களுடையதாகும். புதிய நண்பர்கள், புதிய சமூகத் தலைவர்களை வீட்டிற்கு வரவேற்கிறோம்' என தெரிவித்துள்ளார்.