தைரியமாக தனது புற்றுநோய் குறித்து பகிர்ந்த இளவரசி கேட்..விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் இளவரசி கேட் மிடில்டன் விரைவில் நலம் பெற வாழ்த்துவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
புற்றுநோய்
பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுக்கு, கடந்த சனவரி மாதம் லண்டன் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது பக்கிங்ஹாம் அரண்மனை புற்றுநோய் தொடர்பான பிரச்சனை அல்ல என தெரிவித்தது. இந்த நிலையில் இளவரசி கேட் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த வீடியோவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாகவும், வலுவாக அதனை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து
கேட் மிடில்டன் விரைவில் நலம் பெற கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ்தள பதிவில்,
''வேல்ஸ் இளவரசி அவரது புற்றுநோய் பற்றிய செய்தியை மிகவும் தைரியமாக பகிர்ந்துகொண்டார். எனது எண்ணங்கள் அவருக்கும், அவரது குழந்தைகள் மற்றும் முழு அரச குடும்பத்துடனும் உள்ளன. கனேடியர்கள் சார்பாக, அவர் சிகிச்சை பெறுவதால் எனது ஆதரவை அனுப்புகிறேன். நாங்கள் அனைவரும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்'' என தெரிவித்துள்ளார்.
My thoughts are with the Princess of Wales, her children, and the entire Royal Family following the news of her cancer so courageously shared.
— Justin Trudeau (@JustinTrudeau) March 22, 2024
On behalf of Canadians, I’m sending my support as she undergoes treatment. We’re all wishing her a swift recovery.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |