வரலாற்றில் முதல் முறையாக டேவிஸ் கோப்பையை வெல்லுமா கனடா? இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவுடன் மோதல்
டேவிஸ் கோப்பை டென்னிஸின் இறுதிப்போட்டியில் கனடா மற்றும் அவுஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்துகின்றன.
அவுஸ்திரேலியாவுடன் மோதல்
ஸ்பெயினில் நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கனடா அணி மூன்றாவது முறையாக களமிறங்க உள்ளது.
கனடாவை எதிர்த்து 28 முறை இந்தப் பட்டத்தை வென்ற அவுஸ்திரேலியா இன்று விளையாட உள்ளது. அரையிறுதியில் குரேஷிய வீரர் மரின் சிலிச்சை, அவுஸ்திரேலியாவின் டிமினார் வீழ்த்தினார்.
அதேபோல் இரட்டையர் பிரிவிலும் அவுஸ்திரேலிய வீரர்கள் வெற்றி பெற, டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலிக்கு எதிராக கனடா வீரர் ஆகர்-அலியாஸிம் ஒற்றையர் பிரிவில் இரண்டு செட்களில் வெற்றி பெற்றார். அத்துடன் வாசெக் போஸ்பிசிலுடன் இணைந்து 2-1 என கனடாவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
The Canadian Golden Era ?
— Davis Cup (@DavisCup) November 26, 2022
In 2019 @tenniscanada made their Davis Cup Final debut, three years later, they're in it AGAIN ?#DavisCup #byRakuten | @felixtennis @VasekPospisil pic.twitter.com/laTAtjXDbe
இந்த நிலையில் இத்தாலியை வீழ்த்தியது குறித்து டென்னிஸ் கனடா தனது ட்விட்டர் பக்கத்தில், 'இது ஒரு சாதனை உணர்வு. டேவிஸ் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேற, இத்தாலிக்கு எதிராக கூடுதல் நேரம் உழைக்க வேண்டியிருந்தது. இந்த ஞாயிற்றுக்கிழமையும் ஓய்வு இல்லை, ஆனால் எங்களின் வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன' என பதிவிட்டுள்ளது.
ட்ரூடோவின் வாழ்த்து
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கனடா அணிக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், '1913, 2019, 2022 என வரலாற்றில் மூன்றாவது முறையாக டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியில் கனடா களமிறங்குகிறது. கனடா அணிக்கு வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.