கனடா மக்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட முக்கிய அறிக்கை!
Discovery of the 3400 year old cityகனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தடுப்பூசி போட விரும்பும் நாட்டின் அனைத்து பெரியவர்களுக்கும் கோடை இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளார்.
கனடாவில் சனிக்கிழமை வரை 7,785,807 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
அதாவது நாடு முழுவது 784,671பேர் அல்லது 2.1 சதவீதம் மக்கள் முழுவதுமாக தங்கள் தங்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், "கோடைகாலத்தின் முடிவில் ஒவ்வொரு கனேடியரும் முழுமையாக தடுப்பூசி போடுவார்கள் என்ற எங்கள் உறுதிப்பாட்டை பூர்த்தி செய்வதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம்," என்று பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ சனிக்கிழமை தனது உரையில் கூறினார்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் செப்டம்பர் இறுதிக்குள் தடுப்பூசி போடுவதே கண்டா அரசாங்கத்தின் அசல் குறிக்கோளாக இருக்கிறது.
மார்ச் மாத இறுதிக்குள் 6 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படும் என திட்டமிட்ட நிலையில், அதையும் கடந்து சுமார் 9.5 மில்லியன் டோஸ்கள் செலுத்தப்பட்டுக்கிறது என ட்ரூடோ கூறினார்.