பொய்யான கருத்து கணிப்புகள்! கனடா பொது தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பொது தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கே வெற்றி என அந்நாட்டின் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால் லிபரல் கட்சி பெரும்பான்மையான இடங்களை வெல்லுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கனடாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தோ்தலில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அவா் ஆட்சியமைத்துள்ளாா்.
2023-ஆம் ஆண்டு அடுத்த தோ்தல் நடைபெறவேண்டிய நிலையில், அங்கு முன்கூட்டியே தோ்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வாக்குப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியது. ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கும், கன்சா்வேடிவ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஆரம்பத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராகவும், கன்சா்வேடிவ் கட்சி சாா்பில் பிரதமா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எரின் ஓ டூலிக்கும் சாதகமாகவும் இருந்தது.
Prime Minister Justin Trudeau's Liberal Party will form the country's next government after a snap election, Canadian news outlets projecthttps://t.co/TOGwgNs1CO
— CNN Breaking News (@cnnbrk) September 21, 2021
இந்த நிலையில் கருத்து கணிப்புகளை பொய்யாக்கும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கே வெற்றி என அந்நாட்டின் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதே நேரம் லிபரல் கட்சி பெரும்பான்மையான இடங்களை வெல்லுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மேலும் இறுதி முடிவுகள் முழுவதுமாக தெரிய செவ்வாய்க்கிழமை காலை வரை (கனடிய நேரப்படி) காத்திருக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி லிபரல் கட்சி 157 இடங்களிலும், கன்சா்வேடிவ் கட்சி 122 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது, மற்றொரு கட்சியான என்.டி.பி 29 இடங்களில் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.