ஐரோப்பாவில் தடை செய்யப்பட்ட பிரபல கால்பந்து அணி: பெருந்தொகை அபராதமும் விதிப்பு
பிரபல இத்தாலிய கால்பந்து அணியான ஜுவென்டஸ், அடுத்த ஐரோப்பிய தொடரில் களமிறங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
பெருந்தொகை அபராதம்
நிதி தொடர்பான விதிகளை மீறியுள்ளதாக கூறி, தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, ஐரோப்பாவின் கால்பந்து நிர்வாகம் பெருந்தொகை அபராதம் விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
@getty
மொத்தமாக 17.15 மில்லியன் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகையில் பாதி நிபந்தனைக்கு உட்பட்டது என்றே கூறப்படுகிறது.
2019 மற்றும் 2021 க்கு இடையில் விளையாட்டு வீரர்களை பதிவு செய்துள்ளதுடன் தொடர்புடையவை இந்த விதி மீறல்கள் என்றே தெரியவந்துள்ளது.
மேல்முறையீடு இல்லை
இந்த நிலையில், UEfa நிர்வாகத்தால் டிசம்பர் மாதம் அதிகாரப்பூர்வ விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு வருந்தவைக்கும் ஒன்று என குறிப்பிட்டுள்ள ஜுவென்டஸ் தலைவர் Gianluca Ferrero,
@getty
எங்கள் செயல்களின் நியாயத்தன்மை மற்றும் எங்கள் வாதங்களில் செல்லுபடியாகும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார். மட்டுமின்றி, தடை விதித்துள்ளதை ஏற்பதாகவும், மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |