வீட்டின் வறுமையால் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட பெண்.., பில்லியன் டொலர் நிறுவனத்துக்கு அதிபதி
தினக்கூலி தந்தையின் மகள் ஒருவர் பில்லியன் டொலர் நிறுவனத்துக்கு அதிபதியான வெற்றிக்கதையை பற்றி பார்க்கலாம்.
யார் இவர்?
பில்லியன் டொலர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் CEO -வாக இருப்பவர் தான் ஜோதி ரெட்டி (Jyothi Reddy). இவரது தந்தை தினக்கூலி. இவருக்கு உடன் பிறந்தவர்கள் 5 பேர் உள்ளனர். இதனால், வறுமையின் காரணமாக ஜோதி ரெட்டியை ஆசிரமம் ஒன்றில் சேர்த்தனர். அங்கு தங்கியிருந்து அரசுப்பள்ளியில் படித்து வந்தார் ஜோதி.
இவருக்கு, 16 வயதில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனால் 18 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வறுமையால் தினமும் ரூ.5 வேலைக்கு ஜோதி சென்றார். அப்போது தான் இவருக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் பாடம் சொல்லி கொடுக்கும் வேலை கிடைத்தது. ஆனால், அதில் கிடைக்கும் பணமும் போதாததால் இரவில் தையல் வேலை செய்தார்.
1994 -ம் ஆண்டில் டாக்டர் பிஆர் அம்பேத்கர் ஓபன் யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்றார். இதனைத்தொடர்ந்து 1997 -ம் ஆண்டு காகாத்திய யுனிவர்சிட்டியில் மாஸ்டர் டிகிரியை முடித்தார். இதனால், இவரது வருமானம் ரூ.398 ஆக உயர்ந்தது.
பின்னர், அமெரிக்காவில் உள்ள உறவினர் மூலம் அங்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் இருந்ததை அறிந்து கொண்டார். அங்கு சென்று முதலில் பெட்ரோல் பங்கில் வேலை செய்தார். அப்படி சிறு வேலைகள் மட்டுமே ஜோதிக்கு கிடைத்தன.
Key Software Solutions
இதன் பின்னர் தான் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் 'ரெக்ரூட்மென்ட் புரொபஷனல்' பணி என்பது Jyothi Reddy -க்கு கிடைத்தது.
பின்பு, தான் சேமித்து வைத்திருந்த 40000 டொலர்களை வைத்து 2021 -ம் ஆண்டு தனக்கென்று ஒரு சொந்த பிசினஸை 'Key Software Solutions' என்ற பெயரில் தொடங்கினார்.
இந்த நிறுவனம் மெதுவாக வளர்ச்சியடைந்து 15 மில்லியன் Turn Over செய்தது. 2017 -ம் ஆண்டு ஜோதி ரெட்டி நிறுவனத்தின் மதிப்பு ஒரு பில்லியன் டொலராக உயர்ந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |