16 வயதில் திருமணம்.,ரூ.5க்கு விவசாய வேலை! வறுமையிலும் சாதித்து காட்டிய பெண்: அவர் யார்?
16 வயதில் திருமணம், ரூ.5 க்கு விவசாய கூலி வேலை என இருளுக்குள் மூழ்கிய வாழ்க்கையை வெற்றி பாதைக்கு திருப்பி மில்லியன் டொலர் மதிப்புள்ள சாப்ட்வேர் நிறுவனத்தின் CEOவாக உயர்ந்த ஜோதி ரெட்டியின் சாதனை பயணம் குறித்து பார்ப்போம்.
16 வயதில் திருமணம்
வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை தொடும் பலரது வாழ்க்கை, வறுமையின் பிடியில் இருந்து மீண்டதாகவே இருக்கும், அப்படி வறுமையான குடும்பத்தில் 5 பிள்ளைகளில் ஒருவராக பிறந்தவர் தான் ஜோதி ரெட்டி.
குடும்ப வறுமை காரணமாக ஜோதி ரெட்டியின் தந்தை அவரை காப்பகத்தில் சேர்த்தார், அங்கிருந்து ஜோதி ரெட்டி அரசு பள்ளியில் தனது கல்வியை தொடர்ந்து வந்தார்.
16 வயதில் குடும்ப நிர்பந்தம் காரணமாக தன்னை விட 10 வயது மூத்த விவசாயி ஒருவரை ஜோதி ரெட்டி திருமணம் செய்து கொண்டார், 18 வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.
1985 முதல் 1990 வரை குடும்ப சூழ்நிலை காரணமாக விவசாய வேலைகளுக்கு சென்ற ஜோதி ரெட்டி 5 ரூபாய் தினக்கூலியாக பெற்றார், இந்த பணம் போதவில்லை என்று இரவு முழுவதும் தையல் தொழில் பார்த்து வந்தார்.
சொந்தமாக 10 ஜெட் விமானங்கள்! 22 வயதில் விமானத் துறையில் சாதித்த பெண் தொழிலதிபர்: அவரின் சொத்து மதிப்பு
இதனால் மனதளவிலும், உடலளவிலும் சோர்ந்து போன ஜோதி ரெட்டி வாழ்க்கையில் உச்சத்தை அடைய வேண்டும் என்று லட்சியத்தை விதைத்து கொண்டார்.
அமெரிக்காவுக்கு பயணம்
கல்வியை ஆதாரமாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டத்தை பயன்படுத்தி 1994ம் ஆண்டு டாக்டர் BR அம்பேத்கர் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் (BA), 1997ம் ஆண்டு Kakatiya பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும்(MA) பெற்றார்.
இதையடுத்து அவருக்கு அதிக சம்பளத்துடன் வேலை கிடைத்தது, ஆனால் அதுவும் மாதம் வெறும் ரூ.398 ஆக இருந்தது ஜோதி ரெட்டிக்கு போதுமானதாக இல்லை.
இந்நிலையில் தான் அமெரிக்காவில் இருந்து வந்த உறவினர்கள், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது குறித்த ஐடியாவை ஜோதி ரெட்டிக்கு வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கணினி படிப்புகளில் ஆர்வம் செலுத்தி படித்து முடித்து, வேலைக்காக ஜோதி ரெட்டி அமெரிக்கா சென்றார்.
2,500 கோடி நிறுவனத்தை திருமணங்கள் மூலம் உருவாக்கிய தொழிலதிபர்: வெற்றி ரகசியம், சொத்து மதிப்பு தெரியுமா?
ஆரம்ப கட்டத்தில் பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பணியாற்றிய ஜோதி ரெட்டிக்கு, இறுதியில் ஆட்சேர்ப்பு நிபுணராக வேலை கிடைத்தது.
கிட்டத்தட்ட 40,000 டொலர்கள் சேர்த்து வைத்த ஜோதி ரெட்டி Arizona, US என்ற இடத்தை மையமாக கொண்டு 2021ம் ஆண்டு சொந்தமான Key Software Solution என்ற ITஐ நிறுவினார்.
நிறுவனத்தின் CEOவாக உயர்ந்த ஜோதி ரெட்டி 15 மில்லியன் டொலர் வரை சீராக சம்பாதிக்க தொடங்கினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |