3 மாதங்களில் 9 கிலோ எடையை குறைத்த நடிகை ஜோதிகா.., எப்படி தெரியுமா?
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஜோதிகா, 3 மாதங்களில் 9 கிலோ எடை குறைத்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கடுமையான டயட் அல்லது உடற்பயிற்சி இன்றி இதை சாதித்த ஜோதிகாவின் உள் ஆரோக்கியத்திற்கும் இவை முக்கியத்துவம் அளித்தது.
ஜோதிகா, இடைப்பட்ட உண்ணாவிரதம், அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகள் போன்ற பல டயட் திட்டங்களை முயற்சித்ததாகவும், ஆனால் அவை நீண்ட காலத்திற்கு பலனளிக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், குடல் ஆரோக்கியத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கியபோதுதான் உண்மையான மாற்றம் ஏற்பட்டதாக ஜோதிகா தெரிவித்தார்.
கலோரிகளைக் குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், எந்த உணவுகள் தனது உடலுக்கு ஆற்றலையும், சமநிலையையும் அளிக்கின்றன என்பதில் கவனம் செலுத்தினார்.
வீக்கத்தை உண்டாக்கும் உணவுகளைப் புரிந்துகொள்வதும், நார்ச்சத்து மற்றும் புரோபயாடிக்குகள் போன்றவற்றை உணவில் சேர்ப்பதும் தனது ஆற்றல் மற்றும் மனநிலையை மேம்படுத்த உதவியதாகக் கூறினார்.
எடை குறைப்பது முக்கியம் என்றாலும், வலிமையும், தன்னம்பிக்கையும் மிகவும் முக்கியம் என்று அவர் நம்புகிறார்.
பெண்களுக்கு வலிமை பயிற்சி உடலை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்கிறது.
ஜோதிகாவின் இந்த மாற்றம் எடை குறைப்பு மட்டுமல்லாமல் மன சமநிலை, மன அழுத்த மேலாண்மை மற்றும் சுய அன்பு ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |