சகோதரரிடம் கடன் வாங்கிய ரூ.5,000... இன்று ரூ.14,000 கோடி நிறுவனத்தின் உரிமையாளர்
தற்காலிக தொழிற்சாலை ஒன்றை நிறுவ தமது சகோதரரிடம் இருந்து ரூ.5,000 கடன் வாங்கியவர், இன்று ரூ.14,000 கோடி நிறுவனத்திற்கு உரிமையாளர்.
பிரபலமான உஜாலா ப்ளூ
இந்தியாவின் கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமான Jyothy Labs நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிறுவனர் தான் ராமச்சந்திரன். Jyothy Labs நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ.14,000 கோடி என்றே கூறப்படுகிறது.
Jyothy Labs நிறுவனம் தான் பிரபலமான உஜாலா ப்ளூ என்ற துணிகளுக்கான ஒயிட்னரை தயாரிக்கிறது. தொடக்கத்தில் தமது சகோதரரிடம் இருந்து ரூ.5,000 கடனாகப் பெற்று தான் தற்காலிக தொழிற்சாலை ஒன்றை நிறுவியுள்ளார் ராமச்சந்திரன்.
முதுகலைப் பட்டப்படிப்புக்குப் பிறகு கணக்காளராகப் பணியாற்றத் தொடங்கினார் ராமச்சந்திரன். ஆனால் புதிய தொழில் முயற்சியில் ஈடுபாடு கொண்ட அவர் ஆடைகளுக்கு ஒயிட்னர் தயாரிக்க முடிவு செய்து, அதற்காக தனது சமையலறையில் பரிசோதனை செய்யத் தொடங்கினார்.
ஊதா நிற சாயங்கள்
சோதனைகள் பல அவருக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. ஒருமுறை இரசாயன தொழில் தொடர்பான இதழில் பார்த்த விடயம், அவருக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. அதாவது, ஜவுளி உற்பத்தியாளர்கள் வெள்ளை மற்றும் பிரகாசமான வண்ணங்களை அடைய உதவுவதற்கு ஊதா நிற சாயங்கள் பயன்படுத்துவதாக அறிந்துகொண்டார்.
இதனையடுத்து ஒரு வருடம் ஊதா நிறங்களில் தொடர்ந்து பரிசோதனை செய்தார். 1983ல், கேரளாவின் திருச்சூரில் குடும்ப நிலத்தின் ஒரு சிறிய பகுதியில் ஒரு தற்காலிக தொழிற்சாலையை நிறுவினார்.
தனது மகள் ஜோதியின் நினைவாக அந்த நிறுவனத்திற்கு ஜோதி லேபரட்டரீஸ் என்று பெயரிட்டார். அங்கிருந்து தொடங்கியது ராமச்சந்திரனின் வரலாற்றுப் பயணம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |