சூர்யாவுக்கு நான் கொடுத்த திருமண பரிசு இது தான்! முதன் முறையாக நடிகை ஜோதிகா நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்
பிரபல திரப்பட நடிகையான ஜோதிகா, தன்னுடைய காதல் கணவரும் நடிகரான சூர்யாவுக்கு கொடுத்த அன்பான பரிசை முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பலராலும், தொடர்ந்து பாராட்டப்பட்டு வரும் திருமணம் ஜோடிகளில் சூர்யா-ஜோதிகா ஜோடியும் ஒன்று.
இவர்கள் இருவரும் தங்களுடைய ஆரம்பகாலகட்டத்தில், உயிரிலே கலந்து, காக்க காகா, பேரழகன், மாயாவி போன்ற படங்களில் நடிக்க, அது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க, கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர், தற்போது வரை இந்த ஜோடி குறித்து எந்த ஒரு சர்ச்சை செய்திகள் வந்தது கிடையது. இவர்கள் இருவரும் அந்தளவிற்கு ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜோதிகா சமீபத்தில் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வருகை தந்தார். இவர் வருகை தந்தை சில மணி நேரங்களிலே ஒரு மில்லியன் பாலோவர்களை பெற்றார்.
அதைத் தொடந்து அதில் அவர் தன்னுடைய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று இந்த ஜோடி தங்களுடைய 15-வது திருமண ஆண்டை கொண்டாடியது.
அப்போது ஜோதிகா தன்னுடைய காதல் கணவன் ஆன, சூர்யாவுக்கு ஒரு சர்பிரைஸ் கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய கையாள் அஞ்சான் பட போஸ்டரை அப்படியே வரைந்தும், அதைத் தொடர்ந்து இரண்டு சிங்கங்கள் ஒன்றையொன்று கடிப்பிடிப்பது போன்றும் வரைந்துள்ளார்.
இதை, அவர் தன்னுடைய திருமண பரிசாக சூர்யாவிற்கு கொடுத்துள்ளார்.
மேலும், அதில், சரியான நபரை சந்திப்பது விதி, அவருடைய மனைவியாக மாறுவது ஒரு தேர்வு, ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரே நபரை மேலும், மேலும் காதலிப்பது என்பது நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.
ஒரு உண்மையான மனிதன். என் குழந்தைகளின் தந்தை, என் கணவர், என் துணை நட்சத்திரம், என் அம்மா, மிக முக்கியமாக என் சிறந்த நண்பர், இந்த சிறப்பு நாளில் என் சிங்கத்திற்கு ஒரு சிறிய பரிசு என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.