வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்க தான் மைதானம் வந்தேன்! சதம் விளாசிய கே.எல் ராகுல் பேட்டி
Thiru
in கிரிக்கெட்Report this article
இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டியில் வீரர்களுக்கு தண்ணீர் போத்தல் எடுத்து கொடுக்கவே மைதானத்திற்கு வந்தேன் என கே.எல் ராகுல் தெரிவித்துள்ளார்.
சதம் விளாசிய விராட் கோலி, கே.எல் ராகுல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 356 ஓட்டங்கள் எடுத்தது.
அத்துடன் இந்திய அணி சார்ப்பில் விராட் கோலி 122 ஓட்டங்களும், கே எல் ராகுல் 111 ஓட்டங்களும் குவித்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பார்ட்னர்ஷிப்பில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் என்ற பெருமையை இருவரும் அடைந்துள்ளனர்.
மேலும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
தண்ணீர் போத்தல் கொடுக்க தான் வந்தேன்
காயம் காரணமாக இந்திய அணியில் சில தொடர்களில் இடம்பெறாமல் இருந்த கே.எல் ராகுல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தேர்வு செய்யப்பட்டார்.
காயம் குணமாகி இந்திய அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே கே.எல் ராகுல் சதம் விளாசியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கே.எல் ராகுல் தெரிவித்துள்ள கருத்தில், “நான் மைதானத்திற்கு வந்ததே வீரர்களுக்கு தண்ணீர் போத்தல் எடுத்து கொடுக்க தான்” என தெரிவித்துள்ளார்.
போட்டிக்கான நாணய சுழற்சி செய்வதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு தான் நீ இந்த போட்டியில் விளையாடுகிறாய் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சொன்னார்.
நான் மைதானத்திற்கு எந்தவொரு உபகரணங்களையும் எடுத்து வரவில்லை, மைதானத்தில் வீரர்களுக்கு தண்ணீர் எடுத்து கொடுக்கும் வேலையை தான் செய்வேன் என்று நினைத்தேன் என கே.எல் ராகுல் தெரிவித்துள்ளார்.