டோனிக்காக இதை செய்ய தயார்! இந்திய அணியின் இளம் வீரர் கே.எல்.ராகுல் நெகிழ்ச்சி
இந்திய அணியின் இளம் வீரரான கே.எல்.ராகுல் டோனி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
இந்திய அணிக்காக கடந்த 2004-ஆம் ஆண்டு அறிமுகமான டோனி, அதன் பின் இந்திய அணிக்கு மூன்று வித ஐசிசி கோப்பைகளை வாங்கிக் கொடுத்து இந்தியாவை பெருமைப்படுத்தியவர்.
அதுமட்டுமின்றி தன்னுடைய கிரிக்கெட் காலத்தில், இந்திய அணியில் இருந்த போது, பல இளம் வீரர்களை தேடிப் பிடித்து வாய்ப்பு கொடுத்தவர். அப்படிப்பட்ட டோனி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவரை பற்றிய செய்தி ஏதேனும் ஒன்று தினந்தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில், இந்திய அணியின் இளம் வீரரான கே.எல்.ராகுல், கேப்டன் என்றால் எங்கள் நினைவுக்கு வருவது டோனி ஒருவர் மட்டுமே. ஏனென்றால் நாங்கள் அனைவரும் டோனியின் காலத்தில் விளையாடி உள்ளோம்.
அவர் ஒரு சகாப்தம். இந்திய அணியில் விளையாடும் வீரர்களை தவிர்த்து மற்ற உலக கிரிக்கெட் வீரர்களின் மத்தியில் ஒரு தனி கவனத்தைப் பெற்றவர் டோனி. அவருக்காக துப்பாக்கி குண்டுகளை கூட வாங்க தயார் என ராகுல் தெரிவித்துள்ளார்.