2026 உலகக்கிண்ணம் என் மனதில் உள்ளது.,ஆனால் இப்போதைக்கு - மனம்திறந்த கே.எல்.ராகுல்
மீண்டும் டி20 அணியில் இடம் பிடிக்க விரும்புவதாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
கே.எல்.ராகுல்
கடந்த காலங்களில் தனது மெதுவான Scoring Ratesஆல் கே.எல்.ராகுல் விமர்சிக்கப்பட்டார். ஆனால், நடப்பு சீசனில் அவரது ஆட்டம் வேகமெடுத்தது.
ஐபிஎல் 2025யில் ராகுல் 149.72 ஸ்ட்ரைக் ரேட்டில் 539 ஓட்டங்கள் குவித்துள்ளார். துரதிர்ஷடவசமாக அவரது அணி ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
இதனால் அடுத்து வரவிருக்கும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் கவனம் செலுத்த உள்ளார்.
எனினும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கிண்ண தொடரில் விளையாட, தனக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்.
நான் இப்போது எப்படி விளையாடுகிறேன்
இதுகுறித்து பேசிய அவர், "நான் டி20 அணியில் மீண்டும் இடம்பெற விரும்புகிறேன். உலகக் கிண்ணமும் என் மனதில் உள்ளது. ஆனால், இப்போதைக்கு நான் இப்போது எப்படி விளையாடுகிறேன் என்பதை ரசிக்க முயற்சிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
கடந்த பல சீசன்களில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 140ஐத் தாண்டத் தவறியது. இதனால் அவர் இந்திய டி20 அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனைக் குறிப்பிட்டு பேசிய கே.எல்.ராகுல் (K.L.Rahul), "எனது வெள்ளை பந்து விளையாட்டு விளையாட்டு மற்றும் வெள்ளை பந்து கிரிக்கெட்டைப் பற்றி சிந்திக்க எனக்கு சிறிது நேரம் கிடைத்தது என்பது தெளிவாகிறது; எனது செயல்திறன் மற்றும் நான் இருந்த இடத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்" என தெரிவித்தார்.
ஒருமுறை தனது ஸ்ட்ரைக் ரேட் மிக மிக அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியதற்காக ராகுல் விமர்சனத்திற்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |