மலையக காமன் கூத்தின் வரலாறு தெரியுமா? (வீடியோ)
மலையகத்தின் அடையாளமாக இருக்கும் காமன்கூத்தானது இன்று வரை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது.
மலையகத்தை தனித்து அடையாளப்படுத்தும் கூத்துக் கலைகளில் காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் முதலான கூத்துக் கலைகள் பிரதானமாக இருகின்றது.
மலையகத்தில் இன மத வேறுபாடுகளை கடந்து மலையகத்தராய் ஒரு சமூகமாய் இணைந்து இக் காமன் கூத்து நடைபெறுகின்றது.
இறைவழிபாட்டு தன்மையை அடையாளப்படுத்தும் விதமாகவுமே முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் இன்றைய நிலையில் மலையக குல தெய்வ வழிபாடுகள் என்ற பிரிவிற்குள் மலையகத்தின் பெரும்பாலான தோட்டங்களில் இடம் பெற்று வருகின்றது.
இவ்வாறு இடம் பெறும் காமன் திருவிழாவிற்கு இன்றைய நாளலவில் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
மேலும் காமன்கூத்தின் விரிவான விளக்கத்தை தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கவும்.