ஹரியானாவில் சர்வதேச கபடி வீரரின் மனைவி எடுத்த விபரீத முடிவு: பொலிஸார் விசாரணை
ஹரியானாவில் சர்வதேச கபடி வீரரின் மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரை மாய்த்துக் கொண்ட கபடி வீரரின் மனைவி
ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் சர்வதேச கபடி வீரர் ஷீலு பல்ஹாராவின் 23 வயது மனைவி முஸ்கான் வெள்ளிக்கிழமை அவர்களது இல்லத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முஸ்கானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் அதிகாரிகள் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

மனைவி முஸ்கானின் உயிரை மாய்த்துக் கொள்ளும் இந்த முடிவுக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
சர்வதேச கபடி வீரரான ஷீலு பல்ஹாராவுக்கும் ரோஹ்தக் மேகம் பகுதியை சேர்ந்த முஸ்கானுக்கு கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹர்திக் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |