திகிலின் பிடியில் காபூல்... தன் மக்களை வெளியேற்றும் பிரான்ஸ்
தாலிபான்களிடம் வீழ்ந்ததால் காபூல் நகரை திகில் சூழ்ந்துள்ள நிலையில், தன் குடிமக்களையும், கூட்டாளிகளையும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் பிரான்ஸ் இறங்கியுள்ளது.
காபூலில் இருக்கும் பிரான்ஸ் நாட்டவர்கள் மட்டுமல்ல, பிரான்சின் பாதுகாப்பிலிருப்பவர்களும் அங்கிருந்து மீட்கப்படுவார்கள் என பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி தெரிவித்துள்ளார்.
காபூலிலிருந்து வெளியேற்றப்படுவோரில் தூதரக அலுவலர்களும் அடங்குவர் என்றார் பிளாரன்ஸ்.
குறிப்பாக, நம் நாட்டுக்கு பெரிதும் உதவியாக இருந்த ஆப்கன் நாட்டவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் முதலானவர்களையும் மீட்க இருக்கிறோம் என்றார் அவர்.
ஆப்கானிஸ்தானிலிருக்கும் தன் மக்களை மீட்பதற்காக பிரான்ஸ் இரண்டு போர் விமானங்களை அனுப்பியுள்ளது.