ஒரு கப் கடலை மா இருந்தால் போதும்; 5 நிமிடத்தில் தோசை தயார்!
பொதுவாகவே காலை உணவாக தோசை மற்றும் இட்லி இருந்தால் பலரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம்.
அதிலும் தோசையை விதமான சுவையில் சாப்பிடுவது என்றால் சிறியவர்களுக்கு அதிக ஆசை இருக்கும்.
எனவே வீட்டில் இருக்கும் கடலை மா வைத்து எப்படி சுவையான தோசை சுடலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு - 1 1/2 கப்
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - 1 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
- ஓமம் - 1 தேக்கரண்டி
- கசூரி மேத்தி - 1 தேக்கரண்டி
- வெங்காயம் -1 நறுக்கியது
- இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
- பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
- கேரட் - 1 துருவியது
- குடைமிளகாய் நறுக்கியது
- தக்காளி - 1 நறுக்கியது
- கொத்தமல்லி நறுக்கியது
- எண்ணெய்
செய்முறை
1. பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள், ஓமம், கசூரிமேத்தி சேர்க்கவும்.
2. பின்பு நறுக்கிய வெங்காயம், இஞ்சி , பச்சை மிளகாய், கேரட், குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
3. சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்துவிடவும்.
4. தோசைக்கல்லை சூடு செய்த்து மாவை ஊற்றி வேகவிடவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும்.
5.அடுத்த பக்கம் திருப்பி போடவும். இருபக்கமும் வெந்தததும் சூடாக பரிமாறவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |