முதல் சர்வதேச சதமடித்த வீரர்..வாணவேடிக்கை காட்டிய ஆல்ரவுண்டர்! வங்கதேசத்தை துவம்சம் செய்த இருவர்
ஹராரேவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கையா, சிக்கந்தர் ஆகியோரின் மிரட்டலான ஆட்டத்தினால் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் நடந்தது. முதலில் ஆடிய வங்கதேசம் 2 விக்கெட் இழப்புக்கு 303 ஓட்டங்கள் குவித்தது.
அந்த அணியில் கேப்டன் தமிம் இக்பால் 62 ஓட்டங்கள் எடுத்தார். லித்தன் தாஸ் 81 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரிடையர் ஹர்ட் முறையில் வெளியேறினார். அனமுல் 73 ஓட்டங்களும், முஷ்பிகுர் ரஹிம் 52 ஓட்டங்களும் விளாசினர்.
அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி கையா மற்றும் சிக்கந்தர் ஆகியோரது அபார சதத்தின் மூலம், 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 307 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
PC: Twitter (@ZimCricketv)
Zimbabwe's rebuild continues ?
— ICC (@ICC) August 5, 2022
Watch all the #ZIMvBAN matches on https://t.co/CPDKNxoJ9v (in select regions) ?
? Scorecard: https://t.co/UMQDSxMjxu pic.twitter.com/P86mDTXCOo
இன்னோசென்ட் கையா 110 ஓட்டங்கள் எடுத்தார். இது அவருக்கு முதல் சர்வதேச ஒருநாள் சதம் ஆகும். அவரது விக்கெட்டை தொடர்ந்து, இறுதிவரை களத்தில் நின்ற சிக்கந்தர் ரசா 109 பந்துகளில் 135 ஓட்டங்கள் விளாசினார். இதில் 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும்.
PC: Twitter (@ZimCricketv)
PC: Twitter (@ICC)