நித்யானந்தா உயிரிழப்பா? விளக்கம் அளித்துள்ள கைலாசா
நித்யானந்தா உயிரிழந்து விட்டதாக தகவல் பரவிய நிலையில், அவர் நேரலையில் தோன்ற உள்ளதாக கைலாசா அறிவித்துள்ளது.
உயிரிழந்ததாக வதந்தி
இந்தியாவை சேர்ந்த பிரபல சாமியாரான நித்யானந்தா, திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை உருவாக்கி, ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வந்தார்.
இதன் பின்னர், பெண் சீடர்களை தவறாக நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து தலைமறைவான நித்யானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அந்நாட்டிற்கு என தனி கொடி, ரூபாய் நாணயங்கள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை அறிவித்தார்.
இந்நிலையில், நித்யானந்தா இந்து மதத்தை காக்க உயிர் தியாகம் செய்ததாக அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் பேசிய காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நேரலையில் தோன்ற உள்ள நித்யானந்தா
இந்த தகவல் இணையத்தில் வைரலான நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கைலாசா, நித்யானந்தா நேரலையில் தோன்ற உள்ளார் என தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
BREAKING NEWS : நேரலையில் பகவான் நித்யானந்த பரமசிவம்!
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) April 2, 2025
பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்மீது தொடுக்கப்பட்ட வதந்திகள் உலகம் முழுவதும் கேள்விகளையும், ஊகங்களையும், உண்மையை அறிய கூர்ந்த ஆர்வவத்தையும் எழுப்பி உள்ளது.
இனிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி 7PM ET அன்று, பகவான் நித்யானந்த… pic.twitter.com/Cc6Gd6lfb2
இந்த பதிவில், பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்மீது தொடுக்கப்பட்ட வதந்திகள் உலகம் முழுவதும் கேள்விகளையும், ஊகங்களையும், உண்மையை அறிய கூர்ந்த ஆர்வவத்தையும் எழுப்பி உள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி 7PM ET அன்று, பகவான் நித்யானந்த பரமசிவம் நேரலையில் தோன்றுவார் என்று அறிவிக்கப்படுள்ளது!" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |