19 வயதில் கோடீஸ்வரர்... 7300 கோடி மதிப்பிலான நிறுவனம்: யார் இந்த இளைஞர்
இணையமூடாக மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் Zepto நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் தான் 19 வயதிலேயே இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்தவர்.
ரூ.1000 கோடி சொத்து மதிப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்த கைவல்யா வோஹ்ரா மற்றும் அவரது நண்பர் ஆதித் பாலிச்சா ஆகியோர் இணைந்து Zepto-வை நிறுவியுள்ளனர். இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் இணையமூடாக மளிகைப் பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் தற்போது இதுவும் ஒன்றாகும்.
2022ல் இந்தியாவின் இளம் செல்வந்தர்கள் பட்டியல் வெளியிடப்பட்டதில் ரூ.1000 கோடி சொத்து மதிப்புடன் கைவல்யா வோஹ்ராவும் இடம்பெற்றிருந்தார். இவரது நண்பரும் Zepto நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதித் பாலிச்சாவின் சொத்து மதிப்பு ரூ.1200 கோடி என பதிவாகியிருந்தது.
2021ல் மும்பை மாநகரில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து Zepto நிறுவனத்தை நிறுவினர். 2022 மே மாதம் YC Continuity Fund என்ற நிறுவனம் 200 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை முதலீடு செய்ததை அடுத்து Zepto நிறுவனத்தின் சந்தை மதிப்பு 900 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது.
மளிகைப் பொருட்கள் விற்பனை
2021 டிசம்பர் மாதம் Zepto நிறுவனத்தின் சந்தை மதிப்பு 570 மில்லியன் டொலராக இருந்துள்ளது. 2003 மார்ச் மாதம் பெங்களூருவில் பிறந்த கைவல்யா வோஹ்ரா தமது பாடசாலை படிப்பை முடித்துவிட்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்கு முயன்றுள்ளார்.
ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் தங்கியிருந்த போது தான் நண்பர்களான கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பாலிச்சா இருவரும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் இருவரும் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு மும்பை திரும்ப முடிவு செய்தனர். இந்தியா திரும்பியதும் இருவரும் சேர்ந்து Zepto நிறுவனத்தை நிறுவினர். இந்த நிறுவனம் தற்போது டெல்லி, சென்னை, குர்கான், பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் சேவையை வழங்கி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |