பிரபல இளம் கால்பந்து நட்சத்திரம் மர்ம நபர்களால் படுகொலை
தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர் ஒருவர் கார் கடத்தல் நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை மொத்தமாக உலுக்கியுள்ளது.
கார் கடத்தல் நபர்களால்
தென்னாப்பிரிக்க கால்பந்து அணியான Kaiser Chiefs வீரரான Luke Fleurs என்பவரே துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டு, பரிதாபமாக மரணமடைந்தவர். 24 வயதேயான Luke Fleurs கார் கடத்தல் நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இந்த சம்பவம் குறித்து விரிவான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Luke Fleurs மரணமடைந்த தகவலை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
Kaiser Chiefs அணி நிர்வாகமும் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. இருப்பினும், Luke Fleurs மரணமடைந்த தகவல் சமூக ஊடகங்களில் தீயாக பரவி, ரசிகர்களை மொத்தமாக உலுக்கியுள்ளது.
வளரும் நட்சத்திரமாக
பலர் தென்னாப்பிரிக்க விளையாட்டுக்கு இன்று மோசமான நாள் என்றும், இந்த நாடு பாதுகாப்பற்றது, உங்களை காக்க எங்களால் முடியவில்லை என்றும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அக்டோபர் 2023ல் தான் Kaiser Chiefs அணியில் இணைந்துள்ளார் Luke Fleurs. ஒப்பந்தம் இறுதியான அன்று, கனவு மெய்ப்பட்டது என்று அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
தென்னாப்பிரிக்க கால்பந்து உலகில் வளரும் நட்சத்திரமாக கருதப்பட்டு வந்த Luke Fleurs இதுவரை Kaiser Chiefs அணிக்காக களமிறங்கியதில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |