பெண்களின் உடல்! சரியான பதிலடி கொடுத்த நடிகை காஜல் அகர்வால்
தன்னுடைய உடல் தோற்றம் குறித்து கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால், கடந்த 2020ம் ஆண்டு கவுதம் கிச்லு என்ற தொழிலதிபரை கரம்பிடித்தார்.
தற்போது கர்ப்பமாக உள்ள காஜல் அகர்வால், இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படத்தை பலரும் கிண்டலடிக்கும் தொனியில் பதிவிட்டனர்.
இவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள காஜல், எனது வாழ்க்கை, எனது உடல், எனது வீடு மற்றும் மிக முக்கியமாக எனது பணியிடத்தில் மிகவும் அற்புதமான புதிய முன்னேற்றங்களை நான் அனுபவித்து வருகிறேன்.
சில மீம்கள் மற்றும் கிண்டல்கள் இதை எதுவும் செய்யமுடியாது, அன்பாக இருப்போம், அது மிக கடினமாக இருந்தால் வாழ்வோம், வாழவிடுவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும், ஹார்மோன் மாற்றங்களால் பல மாறுதல்கள் இருக்கும், மார்பகங்கள் பெரிதாகும், முகத்தில் பருக்கள் உருவாகலாம், வழக்கத்தை விட சோர்வாக உணர நேரிடும்.
பிரசவத்திற்குப் பின்னர், இழந்த அழகை பெற சில காலம் ஆகலாம் அல்லது பெற முடியாமலும் போகலாம், இது இயற்கையான ஒன்று தான் என தெரிவித்துள்ளார்.