என் இதயத்தின் ஒரு பகுதி வெளியே இருக்கிறது.. முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்
அன்னையர் தினத்தையொட்டி நடிகை காஜல் அகர்வால் முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகையான காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் நடிப்பை தொடர்ந்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
காஜல்-கவுதம் தம்பதி தங்கள் குழந்தைக்கு 'நீல்' என பெயரிட்டது. இந்த நிலையில் முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனை அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், 'என் முதன்மையே, எனக்கு நீ எவ்வளவு முக்கியமானவன், எப்போதும் என்னுடன் இருக்க போகிறவன் என்பதை நீ அறிந்து கொள்ள விரும்புகிறேன். நான் உன்னை என் கைகளில் பிடித்து, உன்னுடைய சிறிய கையை என் கைகளில் பிடித்து, உன் சூடான சுவாசத்தை உணர்ந்து, உன் அழகான கண்களைப் பார்த்த தருணம், நான் எப்போதும் காதலில் இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும்.
உண்மையிலேயே, நீ என் முதல் குழந்தை. என் முதல் மகன். என் முதல் எல்லாம். வரவிருக்கும் ஆண்டுகளில், நான் உனக்கு கற்பிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், ஆனால் நீ ஏற்கனவே எனக்கு எல்லையற்ற அளவுகளை கற்றுத் தந்திருக்கிறாய். தாயாக இருப்பது என்ன என்பதை நீ எனக்குக் கற்றுக் கொடுத்தாய். தன்னலமற்றவளாக இருக்கக் கற்றுக் கொடுத்தாய். தூய அன்பையும்.
என் இதயத்தின் ஒரு பகுதி என் உடலுக்கு வெளியே இருக்கிறது என்பதை உணர செய்துள்ளாய். என் சிறிய இளவரசனே, நீயே சூரியனே, நீயே என் சந்திரன், வானத்தில் உள்ள எல்லா நட்சத்திரங்களும் நீயே, அதை என்று மறந்து விடாதே' என பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வாலின் இந்த நெகிழ்ச்சி பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        