என்னுடைய 2-ஆம் திருமணம் நின்றதற்கு இது தான் காரணம்! பிக்பாஸ் புகழ் காஜல் பசுபதியை திட்டி தீர்க்கும் இணையவாசிகள்
நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான காஜல் பசுபதி தன்னுடைய திருமணம் நின்று போனதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
தொகுப்பாளினி, நடிகை, என இருந்து வந்த காஜல்பசுபதி, தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இவர் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
அதன் பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்நிலையில் இவர், சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தனக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம், கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது திடீரென்று தன்னுடைய திருமணம் நின்றுவிட்டதாகவும், தான் திருமணம் செய்து கொள்ளும் நபர் ஒரு பாஜகவை சேர்ந்தவர் என்பதால், திருமணத்தை நிறுத்திவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவருக்கு திருமணம் என்பது உண்மை இல்லையாம், அவர் ஒரு பிராங்க் செய்வதற்காக இப்படி காப்பி, பெஸ்ட் மேசஜை போட, அது இந்தளவிற்கு செய்தியாக வந்துள்ளது. இதை அவரே தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் கிண்டல் அடிக்கும் வகையில் பதிவிட, இதைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், காஜல் பசுபதி கொஞ்சம் திட்டியே கமெண்ட் செய்து வருகின்றனர்.