தித்திக்கும் சுவையில் காலா ஜாமுன்.., இலகுவாக செய்வது எப்படி?
காலா ஜாமுன் என்பது குலாப் ஜாமுனின் சற்று மாறுபட்ட இனிப்பு வகையாகும்.
இந்த சுவையான காலா ஜாமுனை வீட்டில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் காலா ஜாமுன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சர்க்கரை- 200g
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- இனிப்பில்லாத கோவா- 200g
- பன்னீர்- 100g
- மைதா- 3 ஸ்பூன்
- சர்க்கரை- 2 கப்
- ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன்
- ரோஸ் எசன்ஸ்- ½ ஸ்பூன்
- குங்குமப்பூ-5 இதழ்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
சர்க்கரை கரைந்த பிறகு அதில் எலுமிச்சை சாறு, ஏலக்காய் தூள், குங்குமப்பூ, ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து ஒரு தட்டில் இனிப்பில்லாத கோவா மற்றும் பன்னீர் சேர்த்து பிசைந்து பின் மைதா சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
பின்னர் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டையை சேர்த்து மிதமான தீயில் நன்கு பொன்னிறமாக பொரிக்கவும்.
இறுதியாக பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து எடுத்தால் சுவையான காலா ஜாமுன் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |