கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து காலமானார்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதிக்கு பிறந்தவர் தான் மு.க.முத்து.
இவர் தமிழ் சினிமாவில் பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தமிழ் சினிமாவில் நடிப்பு மட்டுமின்றி பல்வேறு படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.
மேலும் கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயது மூப்பு காரணமாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த மு.க.முத்து(77) சென்னையில் இன்று காலமானார்.
அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) July 19, 2025
தந்தை முத்துவேலர்… pic.twitter.com/4pXuTAKjf1
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |