லண்டனுக்கு பிறகு மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள சிறப்பம்சம்! நூலக பிரிவுகள் குறித்த முழு விவரம்
லண்டன் அருங்காட்சியகத்திற்கு அடுத்தப்படியாக மதுரையில் இன்று மாலை திறக்கப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் தனி சிறப்பம்சத்தை கொண்டுள்ளது.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்
மதுரை மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்த கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.
மதுரை புது நத்தம் சாலையில் அமைந்து இருக்கும் இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகம் சுமார் 2:13 சதுர அடி பரப்பளவில், அடித்தளத்தோடு சேர்த்து மொத்தம் 6 தளங்களுடன் 114 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் சர்வதேச அளவிலான அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் நவீன வெளியீடுகள் என பல்வேறு துறைகளை சார்ந்த 3.3 லட்சம் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன.
நூலகத்தில் உள்ள பிரிவுகள்
முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த நூலகத்தில் குழந்தைகள் பிரிவு, கலைஞர் பிரிவு, பருவ இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள், ஆங்கில நூல்கள், போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், பல்லூடகம், தமிழ் நூல்கள் பிரிவு, நாளிதழ்கள், அரிய நூல்கள் பிரிவு மற்றும் நூல் பாதுகாப்பு பிரிவு என பல்வேறு பிரிவுகளை கொண்டுள்ளன.
அத்துடன் நூல்களை இரவல் வழங்குவதற்கான மற்றும் திரும்பி பெற்றுக் கொள்வதற்கான பிரிவும், சொந்த நூல்களை வாசிப்பதற்கான பிரிவும் இந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த நூலகம் மதுரை மக்களுக்கானது என்று மட்டும் இருந்துவிடாமல் உலக தமிழர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இந்த பயன்கள் எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Kalaignar_Centenary_Library#கலைஞர்100 pic.twitter.com/5sNB8C1S7z
— Anbil Mahesh (@Anbil_Mahesh) July 15, 2023
லண்டனுக்கு அடுத்து கலைஞர் நூலகத்தில் உள்ள சிறப்பு
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அரிய நூல்கள் பிரிவு வரலாற்று ஆய்வாளர்களுக்கான மிகப்பெரிய சான்றாதாரக் களஞ்சியமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
உதாரணமாக 1824ல் வெளிவந்த சதுரகராதி முதல் பதிப்பு இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ளது, லண்டன் அருங்காட்சியகத்தை அடுத்து இந்த புத்தகம் மதுரை நூற்றாண்டு நூலகத்தில் தான் இடம்பெற்றுள்ளது.
மேலும் 1918ல் வெளிவந்த “ஜஸ்டிஸ்” ஆங்கில இதழ்களும், திராவிட இயக்கத் தலைவர்கள் வெளியிட்ட 50க்கும் அதிகமான நூல்கள் மற்றும் இதழ்கள் இந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |