வீட்டில் காளி அம்மனை வைத்து பூஜை செய்யலமா? அகோரி சாமுண்டி மலாய்கா நேர்காணல்
வீட்டில் காளி அம்மனை வைத்து பூஜை செய்யலமா? என்பது உள்ளிட்ட பல சுவாரஸ்யமான விஷயங்களை நேர்காணலில் தெரிவித்துள்ளார் அகோரி சாமுண்டி மலாய்கா.
இது குறித்து அவர் பேசுகையில்,
உங்கள் குல தெய்வம் காளியாக இருந்தால் தைரியமாக வீட்டில் வைத்து வழிபடலாம். வீட்டில் எதற்காக காளியை வைத்து பூஜை செய்யக்கூடாது என்பதுன்னா, அம்மனுக்கு ஏற்ற பூஜையை நம்மால் கொடுக்க முடியாது.
எந்தவித ஆசைகள் எதுவும் இல்லாமல் காளி அம்மனிடம் வரணும். அப்படி வந்தால்தான் முழுமையான சக்தி கிடைக்கும். அதனால்தான் அகோரிகள் உலக வாழ்க்கையை விட்டுவிட்டு வந்த பிறகுதான் இந்த தெய்வீக சக்தியை அவர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பக்கத்தில் காளி கோவில் இருந்தால் செல்லுங்கள். அம்மனை மனதார நினைத்து நன்றாக வழிபடுங்கள். அந்த அம்மனை வீட்டில் கொண்டு வந்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது முட்டாள் தனம்.
பேய், பிசாசுகளிடமிருந்து விடுபட வேண்டுமானால் பத்ரகாளியால் மட்டுமே முடியும். மனதார நாம் யாருக்கும் கெட்டதை நினைக்கவே கூடாது. செய்வினை செய்யவே கூடாது.
இது தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்...