நடிகர், இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன் காலமானார்
பிரபல நடிகரும், இயக்குநருமான கலைப்புலி ஜி.சேகரன் தனது 73வது வயதில் காலமானார்.
கலைப்புலி ஜி.சேகரன்
1985ஆம் ஆண்டில் வெளியான "யார்?" படத்தின் மூலம் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கலைப்புலி ஜி.சேகரன் (73).
அதனைத் தொடர்ந்து ஊரை தெரிஞ்சிகிட்டேன், காவல் பூனைகள், உளவாளி மற்றும் கட்டுவிரியான் ஆகிய படங்களை இயக்கினார்.
1995யில் வெளியான ஜாமீன் கோட்டை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் இவர் பிரபலமானார். மேலும் சில படங்களில் நடித்துள்ள இவர், விநியோகஸ்தரராக பல படங்களை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் அஞ்சலிக்காக
கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த கலைப்புலி சேகரன், அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கலைப்புலி சேகரன் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கலைப்புலி சேகரனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவனது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |