குழந்தைகள் விரும்பி உண்ணும் சுவையான கற்கண்டு பொங்கல்.., எப்படி செய்வது?
கற்கண்டு பொங்கல் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பிரசாதமாகும்.
குழைந்தைகள் விரும்பி உண்ணும் இந்த கற்கண்டு பொங்கல் நாவில் வைத்ததும் அப்படியே கரைந்துவிடும்.
அந்தவகையில், சுவையான கற்கண்டு பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 1 கப்
- பாசி பருப்பு- ½ கப்
- பால்- 1½ கப்
- தண்ணீர்- 1½ கப்
- நெய்- தேவையான அளவு
- கற்கண்டு- 1 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- பச்சை கற்பூரம்- 1 சிட்டிகை
- சர்க்கரை- 50g
- முந்திரி- 10
- திராட்சை- 10
- உப்பு- 1 சிட்டிகை
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் கழுவிய அரிசி, பாசிப்பருப்பு, பால், தண்ணீர் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து 4 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் கற்கண்டு சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துகொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேகைத்த பொங்கல் சேர்த்து அதில் பொடித்த கற்கண்டு சேர்த்த கிளறவும்.
தொடர்ந்து இதில் ஏலக்காய் தூள், பச்சை கர்ப்பூரம், சர்க்கரை, நெய் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
இறுதியாக இதில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கற்கண்டு பொங்கல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |