கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் போலியானதா? வெளியான அதிர்ச்சி தகவல்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி பள்ளி நோட்டில் எழுதிய கையெழுத்துக்கும், அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக சமூகவலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
ஸ்ரீமதி எழுதியாக கடிதம் ஒன்றை பொலிசார் வெளியிட்டிருந்தனர். சிவப்பு நிற மையால் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில், தன்னை வேதியியல் துறை ஆசிரியர், கணித ஆசிரியர் என இருவரும் தொல்லை கொடுத்ததாகவும், தான் நன்றாக படித்ததாகவும், ஆனால் படிக்கவில்லை என கூறி அந்த இரு ஆசிரியர்களும் தன்னை துன்புறுத்தியதாகவும் ஸ்ரீமதி குறிப்பிட்டுள்ளார்.
இதோடு அம்மா, அப்பா, சந்தோஷ், துர்கா உள்ளிட்ட சில பெயர்களை எழுதி என்னை மன்னித்துவிடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார் என கூறுவதை போல அந்த கடிதம் அமைந்துள்ளது. இந்த நிலையில் மாணவி நோட்டுப் புத்தகங்களில் எழுதிய கையெழுத்துக்கும், கடிதத்தில் உள்ள கையெழுத்துக்கும் வித்தியாசம் உள்ளதாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிடப்பட்டு வருகிறது.
அதோடு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி எதற்காக சிவப்பு நிற மை கொண்ட பேனாவால் கடிதம் எழுதினார் எனவும் கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது.
அதே போல மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம் தனது மகளின் கையெழுத்து இது இல்லை என ஸ்ரீமதியின் பெற்றோர்கள் மறுத்துள்ளனர்.