கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு மாணவி ஸ்ரீமதியின் தாயே காரணம்! பள்ளி பெண் நிர்வாகி வெளியிட்ட வீடியோ
கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு மாணவி ஸ்ரீமதியின் தாயார் தான் காரணம் என பள்ளி நிர்வாகம் குற்றச்சாட்டியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் திகதி பள்ளியின் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி வருகின்றனர். மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டி போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறி, மாணவி படித்த தனியார் பள்ளியை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.
பள்ளி வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக இதுவரை 192 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், மாணவியின் மரணம் தொடர்பாக அப்பள்ளியின் தாளாளர், முதல்வர், செயலாளர், 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே கைது செய்யப்படுவதற்கு முன்பாக பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சக்தி பள்ளி செயலாளர்
— ???ஹிந்து வன்னியர் வழக்கறிஞர் சங்கம் ??? (@VCankam) July 17, 2022
சாந்தி ரவிக்குமார்.....மறுப்பு pic.twitter.com/Kxsbbszmds
அதில், மாணவி தற்கொலை செய்துகொண்ட நாளில் இருந்து பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். எதையும் மறைக்கவில்லை. மாணவியின் தாயார் எங்களை பார்க்க முயற்சித்ததாக கூறுகிறார்.
அப்போது நாங்கள் பொலிஸ் பாதுகாப்பில் இருந்தோம். நாங்கள் எங்கேயும் போகவில்லை. நாங்கள் பொலிஸ் கஸ்டடியில் இருக்கும்போது ஏன் இப்படி வன்முறையை பரப்ப வேண்டும். பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும். மாணவர்கள் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றையும் எரித்து சேதப்படுத்தியுள்ளனர். மாணவர்களின் வாழ்க்கை வீணடிக்கப்பட்டுள்ளது.
இது அனைத்திற்கும் மாணவியின் தாயார் தான் காரணம், அவர் தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.