கருஞ்சீரகம் கொரோனா தொற்றை விரட்ட உதவுமா? ஆய்வில் வெளிவந்த தகவல்
கொரோனா வைரஸின் தாக்கம் உலகத்தையே புரட்டிப் போட்டு கொண்டிருக்கும் வேளையில் பலரும் நோய்த் தொற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றில் கருஞ்சீரக விதைகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.
வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட கருஞ்சீரகம். பல நூற்றாண்டுகளாக வீக்கம் மற்றும் நோய்த் தொற்றுகளை தீர்க்க பாரம்பரிய தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது.
சிட்னியில் உள்ள தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு, கருஞ்சீரகத்தில் உள்ள மூலப்பொருள் கோவிட் -2 மற்றும் கோவிட் -19 சிகிச்சைக்கு உதவும் என்று கண்டறிந்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸால் நுரையீரலில் தொற்று ஏற்படுவதையும் கருஞ்சீரகம் தடுக்கிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர்
கருஞ்சீரகத்தில் உள்ள மூலப் பொருளான தைமோகுவினோன், கோவிட் -19 வைரஸ் நுரையீரலில் நுழைந்து ஏற்படுத்தும் தொற்றை தடுக்கிறது என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் உள்ளதாக முன்னணி எழுத்தாளரும், சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கனீஸ் பாத்திமா கூறியுள்ளார்.
அதேபோல், கொரோனா வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தீவிர நோயாளிகளை பாதிக்கும் சைட்டோகைன் புயலை இது தடுக்கும் என்று கூறியுள்ளார். இதுகுறித்த ஆய்வு, பரிசோதனை மருந்தியல் மற்றும் உடலியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.