கடன் வாங்கி நகைக்கடை திறந்த கேரள கல்யாண ராமன்.., இன்று ரூ.17,000 கோடிக்கு சொந்தக்காரர்
இந்தியா மட்டுமன்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் மற்றும் ஓமன் போன்ற நாடுகளிலும் நகைக்கடை வைத்துள்ளவரை பற்றி தான் பார்க்க போகிறோம்.
யார் இந்த கல்யாண ராமன்?
இந்திய மாநிலமான கேரளாவில் 1947 ம் ஆண்டு ஏப்ரல் 23 -ம் திகதி பிறந்தவர் கல்யாண ராமன். இவர் சிறு வயதில் இருந்தே தனது தந்தையின் துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொண்டார்.
இவர் கேரளாவில் உள்ள ஸ்ரீ கேரளா வர்மா கல்லூரியில் வணிகவியல் படிப்பை முடித்தார். இவர் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து சாம்பாதித்த ரூ.25 லட்சத்தை வைத்து நகைக்கடை திறக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
ஆனால் அந்த பணம் போதுமானதாக இல்லை. அதனால் வங்கியில் இருந்து கூடுதலாக ரூ.50 லட்சம் வாங்க முடிவு செய்தார். இதனால், பல சவால்களை எதிர்கொண்டு வங்கியில் இருந்து கடனையும் பெற்றார்.
பின்னர். தனது முதல் கடையை கேரள மாநிலம் திருச்சூரில் எளிமையாக திறந்தார். அதற்கு கல்யாண் ஜூவல்லர்ஸ் என்ற பெயரையும் வைத்தார்.
பல நாடுகளில் ஷோரூம்
தற்போது இந்தியா முழுவதும் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடை 200 -க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது. அதுமட்டுமல்லாமல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் மற்றும் ஓமன் போன்ற நாடுகளில் 30 ஷோரூம்கள் உள்ளன.
சிறிய முறையில் தொழில் தொடங்கிய கல்யாண ராமனுக்கு தற்போது ரூ.17,000 கோடி மதிப்புக்கு அதிகமான சொத்துகள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |