வேட்டி சட்டையில் கமல்ஹாசனும் ஆமீர்கானும்: ஒரு சுவாரஸ்ய காட்சி...
ராஜஸ்தானில் நிகழ்ந்த ஒரு திருமணத்தில், நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ஆமீர்கான் முதலானோர் வேட்டி சட்டையில் காணப்படும் ஒரு சுவாரஸ்ய காட்சி வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வால்ட் டிஸ்னி நிறுவனத் தலைவராகியிருக்கும் கே. மாதவனுடைய மகனின் திருமணத்தில்தான் இந்த காட்சிகள் கமெராவில் சிக்கியுள்ளன.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற அந்த திருமண விழாக் கொண்டாட்டங்களில், கமல்ஹாசன், ஆமீர்கான், மோகன்லால், அக்ஷய்குமார் முதலானோர் பங்கேற்றனர்.
அனைவரும் வேட்டி சட்டை அணிந்திருந்த நிலையில், ஆமீர்கான் கையில் வாக்கிங் ஸ்டிக்குடன் காணப்பட்டதால், அவருக்கு என்ன ஆயிற்று என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.