காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் - நடிகர் கமல்ஹாசன்
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிப்பதாக நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனி விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டார். இத்தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் கண்டனம்
அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், "பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் என் எண்ணங்கள் உள்ளன, காயமடைந்தவர்கள் வலிமையுடன் மீண்டுவர பிரார்த்திக்கிறேன்.
இந்தியா துக்கத்திலும், உறுதியிலும், சட்டம், ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டிலும் ஒற்றுமையாக நிற்கிறது" என தெரிவித்துள்ளார்.
I strongly condemn the heinous terror attack in Pahalgam. My thoughts are with the families who have lost their loved ones, and I wish strength and recovery to the injured.
— Kamal Haasan (@ikamalhaasan) April 22, 2025
India stands united — in grief, in resolve, and in our commitment to uphold law, order, and national…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |