Bigg Boss: மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களமிறங்கும் கமல்ஹாசன்
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசனாக சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன்.
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் விஜய்சேதுபதியை தொலைக்காட்சி தேர்வுசெய்தது.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
குறிப்பாக வாரயிறுதி நாட்களில் விஜய் சேதுபதியின் எபிசோட்களை ரசிகர்களை விரும்பி பார்க்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதிக்கு 10 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்களை தொகுத்துவழங்கிய நடிகர் கமல்ஹாசன் 150 கோடி ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இவரது விலகலுக்கு பல காரணங்கள் கூறப்பட்டன. கடந்த சீசனில் இவரது ஹோஸ்ட்டிங் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானதும் காரணமாக கூறப்பட்டது.
ஆனால் அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பத்தை படிப்பதற்காக சென்றுள்ள கமல்ஹாசன், அதன் காரணமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகியதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே அவர் அடுத்த சீசனில் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைய வாய்ப்புள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத்தலைவர் கோவை தங்கவேலு தற்போது கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |