கடமையை செய்ய போகிறேன்.., எம்பியாக பதவியேற்க டெல்லி புறப்பட்ட கமல் ஹாசன்
மாநிலங்களவை எம்பியாக பதவியேற்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
கமல் டெல்லி பயணம்
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்.பி.க்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை பதவியேற்க உள்ளனர்.
திமுக சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை, மக்கள் நீதி மயயம் சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் நாளை டெல்லியில் பதவியேற்கவுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மயயம் சார்பில் கமல்ஹாசன் நாளை பதவியேற்பதற்காக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். அதற்காக சென்னை விமான நிலையம் வந்த கமல் ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்ய உள்ளேன். நான் பெருமையோடு டெல்லி செல்கிறேன்.
நாடாளுமன்றத்தில் நான் பேசப்போகும் கன்னிப்பேச்சு குறித்து இப்போது என்னால் சொல்ல முடியாது. உங்கள் வாழ்த்துகள், மக்கள் வாழ்த்துகளுடன் டெல்லி சென்று உறுதிமொழி ஏற்க உள்ளேன்"என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |