இனி உத்தரவுகளைப் பெறப்போவதில்லை: ட்ரம்பிற்கு எம்.பி கமல்ஹாசன் கண்டனம்
ரஷ்யாவிடமிருந்து இந்தியா 30 நாட்கள் வரை எண்ணெய் வாங்கிக்கொள்ளலாம் என்று அமெரிக்கா அனுமதி அளித்ததை எம்.பி கமல்ஹாசன் கண்டித்துள்ளார்.
30 நாட்கள் கட்டுப்பாடு
மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்க 30 நாட்கள் கட்டுப்பாடு அளிப்பதாக கூறினார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை இந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகி கண்டித்துள்ளன.
அதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசன் அமெரிக்க ஜனாதிபதியை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
திறமைக்கு ஏற்றவாறு செய்யுங்கள்
அவர் தனது பதிவில், "அன்புள்ள அமெரிக்க ஜனாதிபதி திரு.ட்ரம்ப்பிற்கு, நாங்கள் இந்திய மக்கள், ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாட்டைச் சேர்ந்தவர்கள். தொலைதூர வெளிநாட்டுக் கரைகளில் இருந்து இனி உத்தரவுகளைப் பெறுவதில்லை.
தயவுசெய்து உங்கள் சொந்த வேலையை உங்கள் திறமைக்கு ஏற்றவாறு செய்யுங்கள். இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர மரியாதை மட்டுமே நீடித்த உலகளாவிய அமைதிக்கான ஒரே அடித்தளம். உங்கள் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் அமைதி மற்றும் செழிப்பை நாங்கள் வாழ்த்துகிறோம்" என கூறியுள்ளார்.
To
— Kamal Haasan (@ikamalhaasan) March 7, 2026
The President of the United States of America @POTUS
Dear Mr. President,
We, the people of India, belong to a free and sovereign nation. We no longer take orders from distant foreign shores.
Please mind your own business to the best of your abilities.
Mutual respect…

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |