பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவிப்பு!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் ஹாசன் விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
பிக்பாஸ் தொடரில் இருந்து கமல்ஹாசன் விலகல்
பிக் பாஸ் தமிழின் ஏழு பாகங்களின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு, பிக் பாஸ் தமிழ் 8 பாகத்திற்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
மேலும் பிக்பாஸ் தமிழ் 8 பாகத்திற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கமல்ஹாசன் பிக்பாஸ் தமிழ் 8 தொடரில் தொகுத்து வழங்கப்போவதில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.
உங்கள் ஒவ்வொருவருக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |