டெல்லியில் இருந்து வந்ததும் ஆணவ கொலைகள் குறித்து பேசிய கமல் ஹாசன்
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எம்.பி. கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியது
நடிகரும், மாநிலங்களவை எம்பியுமான கமல் ஹாசன் பேசுகையில், "வெளியில் இருந்து கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்த இடத்தை இப்போது நான் உள்ளே இருந்து பார்க்கிறேன்.
அங்கு இருக்கும் கடமை, பொறுப்பு புரிகிறது. நான் செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கிறது. என்னுடைய முனைப்பு இனிமேல் தமிழ்நாடு தான். இதுதான் என்னுடைய நோக்கம்.
இது தான் என்னுடைய பொறுப்பு என்று நினைக்கிறேன். எனது கடமையை நான் செய்வேன். அங்கு என்ன பேசப்போகிறேன் என்பதை இங்கு சொல்லக்கூடாது.
சுதந்திரம் வாங்குவதற்கு முன்னாடியில் இருந்து ஆணவ கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான அடிநாதம் கட்சிகள் மட்டும் இல்லை. நம்முடைய சமுதாய அமைப்பு. அதனை நாம் மாற்ற வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |